Thursday, August 2, 2012

நோன்பின் மாண்புகள் - 2

நோன்பின் ஒழுக்கங்கள்

  1. பார்வையைப் பேணல். இதில் மனைவியையும் இச்சையுடன் பாராமையும் அடங்கும். ஏனெனில், பார்வை இப்லீஸின் அம்புகளில் ஒன்றாகும்.
  2. நாவைப் பேணல் பொய், கோள், புறம், வீண் பேச்சு, தீய வார்த்தைகள் பேசுதல், சண்டையிடல் போன்றவற்றில் இருந்து தன் நாவைப் பேணுதல்.  பிறர் சண்டையிட்டாலும் நான் நோன்பாளி என்று கூறித் தவிர்த்தல் ஆகியவை இதில் அடங்கும்.
  3. காதைப் பேணுதல் - பொய், கோள், புறம், வீண் பேச்சு, தீய வார்த்தைகள் போன்றவற்றைச் செவியுறுவதில் இருந்தும் தன் காதைப் பேணிக் கொள்ளல்
  4. பிற உறுப்புகளைப் பேணல் மார்க்கம் அனுமதிக்காத செயல்களில் இருந்து பிற உறுப்புகளையும் பேணிக் கொள்ளல்.
  5. ஹலாலான உணவையும் குறைவாக உண்ணுதல்
  6. நமது நோன்பு அல்லாஹ்விடம் ஏற்கத்தக்கதாக இருக்குமோ என்ற அச்சத்துடன் இருத்தல்.
  7. உடலாலும், உள்ளத்தாலும் ஏற்பட்ட பாவங்களுக்காகப் பிழை பொறுக்கத் தேடுதல். சென்றுவிட்ட பாவங்களுக்காக வருந்துவதும், எதிர்காலத்தில் பாவங்கள் செய்யாமல் இருக்க உறுதி பூணுவது.


  8. நோன்பாளிக்கு நோன்பின் பரிந்துரையும், குர்ஆனின் பரிந்துரையும்

    இறைவா, பகற்காலங்களில் உணவு உட்கொள்ளமுடியாமலும், ஆசைகளை அனுபவிக்க விடாமலும் தடுத்து வைத்திருந்தேன். இவருக்காக நான் செய்யும் பரிந்துரையை நீ ஏற்க வேண்டும் என்று நோன்பு கூறுகின்றது. இரவுக்காலங்களில் இவரை உறங்க விடாமல் நான் தடுத்து வைத்திருந்தேன். இவருக்காக நான் புரியும் பரிந்துரையை நீ ஏற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறும். இரண்டின் பரிந்துரைகளும் ஏற்கப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)


    No comments:

    Post a Comment